ஓசூரில் பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரம் செய்ய தடை கோரிய வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்
பதிவு : ஏப்ரல் 10, 2019, 01:47 PM
பாலகிருஷ்ண ரெட்டி, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரியில் தீர்ப்பளித்தது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரியில் தீர்ப்பளித்தது. இதனால், எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியையும் அவர் இழந்தார். இந்நிலையில், அவரது ஓசூர் தொகுதிக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் அதிமுக வேட்பாளராக அவரது மனைவி ஜோதி பாலகிருஷ்ணரெட்டி அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக அவரது கணவர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி  ஒசூரைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்ட நிலையில், பிற்பகலில் அவசர வழக்காக இதை விசாரிக்க நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற. ஓசூர் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

96 views

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

264 views

பிற செய்திகள்

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

30 views

மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு

மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.

201 views

ஸ்டாலினுடன் பாரிவேந்தர், ஈஸ்வரன் சந்திப்பு

தி.மு.க. கூட்டணியில் பங்கேற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்

65 views

3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.

42 views

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் துவக்கம்

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை துவங்குகிறது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.