திருட்டு நகைகளை பங்கு போட்ட போலீஸார்?
பதிவு : ஏப்ரல் 10, 2019, 12:48 PM
சென்னையில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட நகைகளை மீட்டு, அதனை மூன்று தனிப்படை காவலர்கள் பங்கு போட்டு கொண்ட சம்வம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசோக்நகரில் கைது செய்யப்பட்ட பிலிப் என்ற கொள்ளையனிடம், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மை அம்பலமானது. கோடம்பாக்கம் தனிப்படை போலீசார் ராம்குமார், தியாகராஜன், சிவகொழுந்து ஆகியோர் திருட்டு நகைகள் குறித்து தம்மிடம் விசாரித்தாக  காவல்துறையிடம் கொள்ளையன் கூறியுள்ளான். பின்னர், திருட்டு நகைகள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சென்று, தம்மை காட்டி அந்த நகைகளை மீட்டு, 3 காவலர்களும் பங்கு போட்டுக் கொண்டதாக கொள்ளையன் தெரிவித்துள்ளான். அதிர்ச்சி அடைந்த அசோக்நகர் போலீசார், உயர் அதிகாரிகள் கவனத்திற்கு இந்த சம்பவத்தை எடுத்து சென்றனர். தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி, தனிப்படை காவலர்கள் 3 பேரை அழைத்து  விளக்கம் கடிதம் பெற்றுக் கொண்டுள்ளார். அந்த 3 காவலர்களிடமும் துணை ஆணையர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்களே, இது போன்ற செயலில் ஈடுபடுவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5554 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4554 views

பிற செய்திகள்

கொடைக்கானல் பத்ர காளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொடைக்கானல் அப்சர்வேட்டரி புதுக்காடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

5 views

பெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்

குன்னூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக மதுக்கடை ஒன்றை மூடி அதிரடி காட்டியுள்ளார்.

13 views

ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் - கோமதி மாரிமுத்து

போட்டியின் போது தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

14 views

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

7 views

தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

46 views

ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.