கர்ப்பிணி பெண் பலி - தவறான சிகிச்சை காரணமா? : மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
பதிவு : ஏப்ரல் 10, 2019, 03:26 AM
திருவண்ணாமலையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 
கூலி தொழிலாளி ராஜாவின் மனைவி கவிதா, நேற்று இரவு பரிசோதனைக்காக  தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்த குறைவாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.ஏற்கனவே இரண்டு பெண்கள் உள்ள நிலையில், கவிதாவிற்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்த, ரத்த குறைவாக இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஊழியர்கள், கவிதாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். தவறான சிகிச்சை காரணமாகவே கவிதா உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, கிணற்றை  தூர் வாரும் பொழுது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய கவிதாவின் கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பிரசவத்தின் போது மனைவியும் உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1295 views

பிற செய்திகள்

காரைக்குடி : தனியார் நிறுவனத்தில் ரூ. 2.82 கோடி கையாடல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 2 கோடியே 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

29 views

கட்டட வரன்முறை திட்டம் நீட்டிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

விதி மீறல் கட்டடங்களை, வரன்முறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை, மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

37 views

மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு

மகள் திருமணத்திற்காக, 6 மாதம் பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நளினி நேரில் ஆஜராகி வாதாட, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

15 views

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.

16 views

மத்திய சிறையில் காலியாக உள்ள இடங்கள்... ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், நாவிதர், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

63 views

கணினி ஆசிரியர் தேர்வில் விடை தெரியாத கேள்விகள் : தேர்வின் பின்னணியில் முறைகேடுகளா?

ஆன்-லைன் வழியாக, கடந்த 23ம் தேதி நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதால், இதன் பின்னணியில் முறைகேடுகளும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.