"மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் தாருங்கள்" - சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மீண்டும் மனு
பதிவு : ஏப்ரல் 10, 2019, 03:18 AM
மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதம் பரோல் வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது தூக்கு தண்டனை 2000 ஆம் ஆண்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின், இதுவரை, 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த மூவாயிரத்து 700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளதை  மனுவில் நளினி சுட்டிக்காட்டி உள்ளார். ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் வழிவகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை என்றும் நளினி அதில் சுட்டிக்காட்டி உள்ளார். கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனு மீது, வேலூர் சிறை  நிர்வாகம் பரிசீலிக்கவில்லை எனவும் , இந்த மனு விசாரணைக்கு வரும் போது, வழக்கறிஞர் இல்லாமல் தாமே வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் நளினி கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1272 views

பிற செய்திகள்

கொடைக்கானல் பத்ர காளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொடைக்கானல் அப்சர்வேட்டரி புதுக்காடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

5 views

பெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்

குன்னூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக மதுக்கடை ஒன்றை மூடி அதிரடி காட்டியுள்ளார்.

16 views

ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் - கோமதி மாரிமுத்து

போட்டியின் போது தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

16 views

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

7 views

தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

63 views

ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.