நாளிதழில் வெளியான தகவலை ஆதாரமாக எடுக்கலாமா? : ரஃபேல் விவகாரத்தில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பதிவு : ஏப்ரல் 10, 2019, 03:00 AM
ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து கசிந்த முக்கிய தகவல்களை, ஆதாரமாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து கசிந்த முக்கிய தகவல்களை, ஆதாரமாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்து  இன்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. ரஃபேல் ஒப்பந்ததைத்தை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நாளிதழில் வெளியான கட்டுரை அடிப்படையில், சி.பி.ஐ. சாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரசாந்த் பூசன், யஸ்வந்த் சின்கா மற்றும் அருண் ஷோரி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அரசின் அனுமதி இல்லாமல் நகல் எடுத்ததை ஆவணமாக ஏற்க கூடாது என்றும் வலியுறுத்தி  இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

92 views

பிற செய்திகள்

ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு : சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பை அடுத்து நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனையை, வரும் 22ம் தேதி திங்கள் கிழமைக்கு, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம் மனோகர் மிஸ்ரா ஒத்தி வைத்துள்ளார்.

140 views

டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் ரூ. 7 ஆயிரம் கோடி முதலீடு

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, 'டிக்டாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

577 views

பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரம் : ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு அபராதம்

பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரத்தில், கிரிக்கெட் வீர‌ர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ அபராதம் விதித்துள்ளது.

53 views

ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம் : வேலை இழந்தவர்களை பணியமர்த்தும் ஸ்பைஸ்ஜெட்

நிதிநெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் சேவைகள் தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளன.

68 views

பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு தடை : த​லைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

10 views

தொடர் விடுமுறை எதிரொலி - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.