தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
பதிவு : ஏப்ரல் 10, 2019, 02:43 AM
தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபட உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணம் பறிமுதல் மற்றும் பல்வேறு வகையான தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை, ஆயிரத்து 576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சி- விஜில்  என்ற மொபைல் செயலி மூலமாக ஆயிரத்து 954 புகார்கள் பெறப்பட்டு, அதில் 834 புகார்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. வாக்குப் பதிவின் போது வாக்காளர்களின் ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் மை  கர்நாடகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும், மொத்தம் ஒரு லட்சத்து 74 லட்சம் பாட்டில்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 780 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். வாக்குப்பதிவு நாளன்று 63 ஆயிரத்து 957 போலீசார் உட்பட ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல் படையினர் எனமொத்தமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள் என்றும், மேலும் 160 துணை ராணுவப் படை கம்பெனிகளை சேர்ந்த, 14 ஆயிரத்து 400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

101 views

பிற செய்திகள்

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

4 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

9 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

11 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.