"பாஜக 2 பேர் கட்டுப்பாட்டில் உள்ளதாக எழுந்த புகார் ஆதாரமற்றது" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
பதிவு : ஏப்ரல் 10, 2019, 01:30 AM
இரண்டு பேர் கட்டுப்பாட்டில் பாஜக சிக்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக பாஜக, பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகிய இருவரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருப்பதாக கட்சிக்குள்ளேயே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளரிடம் பேசிய, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜகவின் தலைவரும், பிரதமரும் ஒன்றாக இணைந்து செயல்படுவது தான், கட்சிக்கு பலம்  என்றார். கட்சி முழுவதும் அவர்கள் இருவரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருப்பதாக வரும் கருத்துகள் கற்பனை என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் கட்கரி அல்லது ராஜ்நாத் சிங் பிரதமராக வருவார்கள் என உலா வரும் கருத்துக்கு பதிலளித்த அவர், அப்படி ஏதும் நடைபெற வாய்ப்பில்லை என்றார். வருகிற மக்களவை தேர்தலில், பாஜகவுக்கு மூன்றில் ஒரு பங்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றும், மோடி தான் அடுத்த பிரதமர் என்றும் ராஜ்நாத் சிங் உறுதிபட கூறினார்.  

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

97 views

பிற செய்திகள்

கேரளாவில் ஏப்.23-ல் மக்களவை தேர்தல் : 219 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

கேரளாவில் வரும் 23ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது.

19 views

ஜெட்ஏர்வேஸ் வீழ்ச்சி - என்ன காரணம் ?

இழப்பை சந்திக்கும் இந்திய விமான நிறுவனங்கள்

39 views

தொண்டர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் தனது 69-வது பிறந்த நாளை, தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

17 views

3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.

45 views

இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய கார் - 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்

தெலங்கானா மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.