"வாக்கு வங்கிக்காக நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம்" - பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
பதிவு : ஏப்ரல் 10, 2019, 01:17 AM
மாற்றம் : ஏப்ரல் 10, 2019, 09:13 AM
வாக்கு வங்கி அரசியலுக்காக நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சகோதர சகோதரிகளே, தமிழக மக்களுக்கு வணக்கம் என தமிழில் பேசி பிரசாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது என்றார். தொடர்ந்து பேசிய அவர், நம் நாடு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பி தரப்படும் என்றும், தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் பிரதமர் மோடி புகார் கூறினார். வாக்கு வங்கி அரசியலுக்காக, நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம் என்றும், பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், நடுத்தர மக்களுக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி எதுவும் செய்யவில்லை என்றும், காங்கிரசுக்கும், திமுகவுக்கும் வாக்களித்தால் மக்கள் மீதான வரி  அதிகரிக்கும் என்றும், அவர் குற்றஞ்சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

180 views

பிற செய்திகள்

பெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

49 views

காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி

டெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

29 views

பிரதமராக வேண்டும் என நினைத்தது இல்லை - அக் ஷய் உடனான கலந்துரையாடலில் பிரதமர் பதில்

பிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

112 views

ஒரே காரில் மூன்று கட்சிக் கொடிகள் - கட்சிகளால் பிரிக்க முடியாத நட்பு

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.

241 views

நக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

28 views

ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியம் - பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை

புதுச்சேரி அருகே உள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் - முத்தமிழ் தம்பதியின் 2 வயதுமகன் மித்ரனுக்கு, உடல்நலக்குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.