திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...
பதிவு : ஏப்ரல் 09, 2019, 03:07 PM
தாய் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பி.டி.புதூர் பாலாஜிநகரை  சேர்ந்த வனபெருமாள் என்பவர் தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியற்றி வருகிறார். வனபெருமாள் இரவு பணிக்கு சென்று விட்ட நிலையில் அவரது மனைவி வீரலட்சுமி மற்றும் பத்து வயது மகன் போதிராஜ் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுந்த  வீரலட்சுமி, வீட்டின் முன் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்த போது வீட்டிலிருந்து சத்தம் வரவே உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பின் பக்கமாக வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் திடீரென்று வீட்டின் கதவை பூட்டியுள்ளனர். இதனையடுத்து கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க சத்தம் போட்ட வீரலட்சுமியின், தலையை சுவற்றில் மோதி கொலை செய்த கொள்ளையர்கள், தூங்கிக்கொண்டிருந்த அவரது 10 வயது மகனை பள்ளி அடையாள அட்டை கயிற்றால் கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் வீரலட்சுமி அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த 22 சவரன் நகைகளை அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டு  சென்றுள்ளனர். பணி முடிந்து வீட்டிற்கு வந்த வன பெருமாள், மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  பின்னர் தகவல் அறிந்த போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3474 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4045 views

பிற செய்திகள்

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

15 views

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

34 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

18 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

22 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.