சிறந்த கல்வி நிறுனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் - சென்னை ஐஐடி-க்கு முதலிடம்
பதிவு : ஏப்ரல் 09, 2019, 01:18 PM
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தையும், அண்ணாப் பல்கலைக் கழகம் 14 வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்து, மத்திய  மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.2019ஆம் ஆண்டிற்கான தேசிய தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து பெங்களுர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் 2ஆம் இடத்தையும், டெல்லி ஐஐடி 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 14 வது இடத்தையும்,கோவை பாரதியார் பல்கலைக் கழகம் 21வது இடத்தையும்,வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகம் 32 வது இடத்தையும்,சென்னை பல்கலைக் கழகம் 33 வது இடத்தையும் பெற்றுள்ளது.இதனிடையே,சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான பட்டியலில் அண்ணாப் பல்கலைக் கழகம் 6 வது இடத்தையும்,கோவை பாரதியார் பல்கலைக் கழகம் 14 வது இடத்தையும்,சென்னை பல்கலைக் கழகம் 20 வது இடத்தையும்,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் 44 வது இடத்தையும் பெற்றுள்ளது.சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தையும் அண்ணாப் பல்கலைக் கழகம் 9 வது இடத்தையும்,வேலூர் வி.ஐ.டி.பல்கலைக் கழகம் 18வது இடத்தையும் பிடித்துள்ளது.சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான 297 கிராமம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

37 views

திருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

126 views

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...

பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

653 views

பிற செய்திகள்

+2 தேர்ச்சியில் நெல்லை மாவட்டம் முன்னேற்றம் : 2 இடங்கள் முன்னேறி தற்போது 8வது இடம்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நெல்லை மாவட்டம் இந்தாண்டு 2 இடங்கள் முன்னேறி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

14 views

"நந்தினி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கலவரத்துக்கு காரணம்" - திருமாவளவன் குற்றச்சாட்டு

அரியலூர் பொன்பரப்பியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக நேற்று அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

99 views

மஞ்சள் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

22 views

களைகட்டிய மாமல்லபுரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்ச திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

13 views

அருட்கோட்டம் முருகன் கோயில் சித்திரை திருவிழா

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் பர்மா தமிழர்களால் கட்டப்பட்ட அருட்கோட்டம் எனப்படும் முருகன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

8 views

நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சித்திரை தேரோட்டத் திருவிழா

நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உள்ள பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.