தேர்தல் பிரசாரம் - பிரதமர் மோடி கோவை வருகை
பதிவு : ஏப்ரல் 09, 2019, 11:11 AM
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று கோவை வரவுள்ளதையொட்டி, பாதுகாப்பு பணியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை, கொடிசியாவில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.இதற்காக தனி விமானம் மூலம் இன்று  மாலை 6.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.மாலை 6.45 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர்,பின்னர் இரவு 8.15 மணியளவில் தனி விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி புறப்படுகிறார். பிரதமர் வருகையையொட்டி,கோவை விமானநிலையம்,பொதுக்கூட்டம் நடக்க உள்ள கொடிசியா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.