வறுமை காரணமாக ஆடு மேய்க்க அனுப்பப்பட்ட சிறுவர்கள் : அதிரடியாக மீட்ட வருவாய் கோட்டாட்சியர்
பதிவு : ஏப்ரல் 09, 2019, 03:13 AM
வறுமையின் காரணமாக கொத்தடிமையாக ஆடு மேய்க்க அனுப்பப் பட்ட ஐந்து சிறுவர்கள் நாகை அருகே அதிரடியாக மீட்கப்பட்டுள்ளனர் .
விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் முத்துகிருஷ்ணன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தனது மகன்கள் ஐந்து பேர்களை  ஆடு மேய்க்கும் வேலைக்கு  அனுப்பி வைத்துள்ளார். ஆடும் மேய்ப்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு  சென்ற அவர்கள் நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்திற்கு  வந்தனர். சிறுவர்கள்  ஆடு மேய்ப்பதைக்  கண்ட திருக்கண்ணபுரம் கிராம மக்கள்  நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் கமல் கிஷோருக்கு இது குறித்து புகார் அளித்தனர், இது குறித்து நேரில் விசாரித்த, கிஷோர்  சிறுவர்களை கொத்தடிமையாக பணிக்கு அமர்த்திய பரமக்குடியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார் ..மாரி, கன்னியப்பன், திருப்பதி, சிவராஜ், சின்ராசு ஆகிய ஐந்து சிறுவர்களையும் கமல் கிஷோர்  மீட்டார்.  

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

246 views

பிற செய்திகள்

சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

8 views

சென்னையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து

11 views

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விவகாரம் - வடசென்னை திமுக வேட்பாளர் மகன் கைது

காவல் உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனம் மீது கார் மோதியது தொடர்பாக வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதியின் மகன் சித்தார்த் கைது செய்யப்பட்டார்

6 views

"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்

ரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.

9 views

9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை - சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல்

சென்னையில் 2018 ம் ஆண்டில் சுமார் 9 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.