திமுக கூட்டணியை விமர்சித்து பாஜக சுவரொட்டிகள் : பாஜக - அதிமுகவுக்கு திமுக கூட்டணி பதில் சுவரொட்டி
பதிவு : ஏப்ரல் 09, 2019, 03:09 AM
திருப்பூர் தேர்தல் களத்தில் சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தனும் , திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஐயப்பன் கோவில் விவகாரத்தில்  பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தியதால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக பாஜகவினர் பிரசாரம் செய்துவந்தனர். திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இங்கு ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் திமுக - கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என அவர்கள் போஸ்டர்களை ஒட்டினர் .இதற்கு பதிலடியாக ஜி.எஸ்.டி , பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டியதாகவும் திமுக கூட்டணியினர் பிரசாரம் செய்து வந்தனர் . அவர்கள் பெண் குழந்தைகள் இருப்பதாலும் , தொழில்துறை நலிவடைந்திருப்பதாவலும் அதிமுக பாஜகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் எனவும் வீடுகளில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

295 views

பிற செய்திகள்

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

17 views

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

39 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

21 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.