வருமான வரி சோதனை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்
பதிவு : ஏப்ரல் 08, 2019, 04:51 PM
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, வருமான வரி சோதனை நடத்தினால் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய வருவாய் துறை செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, வருமான வரித்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகள் பாரபட்சமின்றி நடுநிலையாகச் செயல்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.சோதனைக்கு முன்னர், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சில நாட்களுக்கு முன்பும், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் நேற்றும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது.இந்நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.தேர்தல் நடவடிக்கைகளுக்காக கறுப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால், அது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை : தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை

திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

31 views

இந்திய வருவாய் பணி அதிகாரி வீட்டில் ரெய்டு : "தலை சுற்ற வைக்கும்" பறிமுதல்கள்

ராஜஸ்தானில் இந்திய வருவாய் பணி அதிகாரி வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய ரெய்டில் 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ரொக்கம், ஏகப்பட்ட நிலம், கடை உள்ளிட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

690 views

வேலூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை...

வேலூரில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

300 views

பிற செய்திகள்

இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.

3 views

அதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

6 views

காமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

13 views

முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

13 views

சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

9 views

சென்னையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து

1209 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.