ரூ.228 கோடி மதிப்புள்ள தங்கம்,வெள்ளி பறிமுதல் - சத்ய பிரத சாஹு
பதிவு : ஏப்ரல் 08, 2019, 04:42 PM
தமிழகம் முழுவதும்,தேர்தல் பறக்கும் படை சோதனையில்,113 கோடி ரூபாய் பணம், 228 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்,வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 4 ஆயிரத்து 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். தேர்தல் தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க மற்றம் இதர கட்சிகள் சார்பில் 40 மனுக்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 24 மனுக்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரத சாஹு குறிப்பிட்டார். அதிகபட்சமாக தி.மு.க சார்பில் 16 மனுக்களும், அ.தி.மு.க சார்பில் 10 மனுக்களும் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.மாற்று திறனாளிகள் வசதிக்காக, வாக்குச்சாவடிகளில் தலா ஒரு வீல் சேர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட உள்ளதாக கூறிய சத்ய பிரத சாஹு, எல்லா வாக்குபதிவு இயந்திரத்திலும்  பிரைலி வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

பிற செய்திகள்

முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

2 views

சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

8 views

சென்னையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து

12 views

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விவகாரம் - வடசென்னை திமுக வேட்பாளர் மகன் கைது

காவல் உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனம் மீது கார் மோதியது தொடர்பாக வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதியின் மகன் சித்தார்த் கைது செய்யப்பட்டார்

6 views

"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்

ரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.

9 views

9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை - சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல்

சென்னையில் 2018 ம் ஆண்டில் சுமார் 9 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.