டாஸ்மாக் கடைகளை மூடினால் வரும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பதிவு : ஏப்ரல் 08, 2019, 04:29 PM
தஞ்சை பள்ளியக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க கோரி மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது , டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.உச்சநீதிமன்ற 
உத்தரவையடுத்து தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் முடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.2004 ஆம் ஆண்டு  7ஆயிரத்து 896 டாஸ்மாக்  கடைகள் இருந்த நிலையில் அவை  தற்போது 5 ஆயிரத்து 239 டாஸ்மாக் கடைகளாக குறைக்கப்பட்டுள்ளதாக  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த பதில் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளை மூடினால் வரும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய வரிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.தமிழக அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் அது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து

ஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

62 views

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...

பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

717 views

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

430 views

பிற செய்திகள்

நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

6 views

மதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்

மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​

5 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

58 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

8 views

தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.

5 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.