கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்த சென்னை : தோனி காலில் விழுந்த ரசிகர்கள்
பதிவு : மார்ச் 27, 2019, 05:59 AM
ஐ.பி.எல். தொடர் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பொறுப்புடன் விளையாடிய தவான் 51 ரன்கள் எடுத்தார். அதிரடி வீரர் பண்ட் 25 ரன்களில் வெளியேற, டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள மட்டுமே எடுத்தது.சென்னை அணியின் பிராவோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்கம் அதிரடியாக இருந்தது. வாட்சன் 44 ரன்களிலும், ரெய்னா 30 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் கேப்டன் தோனி மற்றும் ராயுடு பொறுமையாக விளையாடி ரன் சேர்க்க, சென்னை அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்த தோனியின் காலில் சில ரசிகர்கள விழுந்து ஆசி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

296 views

பிற செய்திகள்

இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

69 views

'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்

இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்

111 views

ஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு

73 views

3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

மும்பை அணியை வீழ்த்தி அபாரம்

66 views

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

ஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது

12 views

ஆடவர் டென்னிஸ் போட்டி : நடால் வெற்றி

மாண்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால் வெற்றி பெற்றார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.