போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்
பதிவு : மார்ச் 22, 2019, 06:19 PM
போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜான்சி ராணி தொடர்ந்த பொதுநல வழக்கில், 18 வயதுக்கு கீழ் 32 கோடி பேர் உள்ள நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.ஒருமுறை தாக்கினால், மீளமுடியாத நோயாக உள்ள போலியோ, சிறுவர்கள், இளைஞர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா மற்றும் நடிகர் சங்க செயலர் ஆகியோரை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டு இருந்தனர்.நடிகர்கள் சூர்யா, விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பினர் பல சேவைகள் பல செய்துவருவதாக கூறினர்.தென்னிந்திய நடிகர் சங்க செயலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய ஒத்துழைப்பு வழங்க சங்கம் தயாராக உள்ளதாகவும், தாமாக முன்வரும் நடிகர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடத்த 3 மாதம் அவகாசம் தேவை - தமிழக தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

0 views

வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் பணியிடை நீக்கம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஆவணங்களை எடுப்பதற்காக சென்ற புகாரின் பேரில், கலால் வரித்துறை வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

66 views

கடலூர் : மோதல் ஏற்படும் சூழல் - போலீசார் உஷார்

மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

17 views

காளியம்மன் கோயிலில் படுகள வைபவம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் காளியம்மன் கோயிலில் படுகள வைபவம் நடைபெற்றது.

21 views

கோதண்டராமர் கோயிலில் திருகல்யாணம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அயோத்தியாபட்டினம் கோதண்டராமர் கோயிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

20 views

சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே ரங்கன்காட்டூரில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.