தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...
பதிவு : மார்ச் 21, 2019, 07:28 PM
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டதுடன்,  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். முருகன் சிறப்பு அலங்காரத்துடன், மயில் வாகன வீதியுலா இரவு நடைபெற உள்ளது.

தீர்த்தவாரி வைபவம் : 

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கும்பகோணத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. கும்பகோணத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் உற்சாகமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான நாகேஸ்வரர் கோவில், ஆதி கம்பட்ட விஸ்வநாதர் கோயில் சுவாமிகள் அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் மகாமகக் குளத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை : 

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவிற்கு  திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் தலைமை தாங்கினார். முன்னதாக கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. 11 நாட்கள் நாள்தோறும் விதவிதமான திருவிழாக்கள் நடைபெற்று, அதனை தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

126 views

பிற செய்திகள்

நடிகர் மோகன்லால் வீட்டில் ஆதரவு கேட்டு குவிந்த கட்சியினர்

மோகன்லாலிடம் ஆதரவு கோரிய நடிகர் சுரேஷ் கோபி

6 views

ஆஸ்திரேலியா : அலைச்சறுக்கு தொடர் - வீராங்கனைகள் சாகசம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

4 views

கனமழையால் நிலச்சரிவு- 14 பேர் பலி

காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு

7 views

ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது

ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

4 views

ஐ.பி.எல்.இறுதிப் போட்டி சென்னைக்கு வாய்ப்பு மறுப்பு : சென்னையிலிருந்து மாற்ற காரணம் என்ன?

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படாதது தமிழக ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

51 views

தென்மண்டல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி

சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தென்மணடல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி தொடங்கியது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.