பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
பதிவு : மார்ச் 20, 2019, 04:49 PM
வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் தலா 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்றும்,சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் 28 லட்ச ரூபாய் வரை செலவிடலாம் என கூறப்பட்டுள்ளது.இது தவிர, வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது பயன்படுத்த கூடிய பொருட்களுக்கான விலை பட்டியலையும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.அதன் படி,மட்டன் பிரியாணி 200 ரூபாய், சிக்கன் பிரியாணி 180 ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என, ஆணையம் நிர்ணயித்துள்ளது.இதே போல காலை உணவிற்கு 100 ரூபாய் என்றும் தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் என்றும் தொப்பி பனியன் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து பட்டியலை வெளியிட்டுள்ளது.இதே போல்,  வெஜிடபுள் பிரியாணிக்கு 100 ரூபாய், மதிய உணவுக்கு 100 ரூபாய், குளிர்பானங்களுக்கு 75 ரூபாய், இளநீருக்கு 40 ரூபாய்,பொன்னாடைக்கு 150 ரூபாய்,தொழிலாளர்களுக்கான செலவு 8 மணி நேரத்திற்கு 450 ரூபாய், பட்டாசுக்கு 600 ரூபாய் மண்டபத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் முதல், ஆறாயிரம் ரூபாய், மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஏசி அறைகளுக்கு ஒன்பதாயிரத்து 300 ரூபாயும், 3 நட்சத்திர ஓட்டல் ஏசி அறைகளுக்கு 5 ஆயிரத்து 800 ரூபாயும் நிர்ணயித்து தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

மக்கள் கூட்டம் அதிகரித்து வருவது நாற்பது தொகுதியிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவதை கூறுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

62 views

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

131 views

அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

91 views

பிற செய்திகள்

இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

82 views

நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

36 views

கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

59 views

இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி

பாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது

62 views

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

22 views

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.