நாடாளுமன்ற தேர்தல் : பிரசார வாகனங்களை உருவாக்கும் பணி தீவிரம்...
பதிவு : மார்ச் 19, 2019, 08:50 PM
மாற்றம் : மார்ச் 19, 2019, 08:53 PM
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசார வாகனங்கள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பிரசாரத்திற்கான தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு, பிரசார வேனை உருவாக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரசாரத்திற்கு தேவையான மைக் மற்றும் SPEAKER SETகளுடன் நாற்காலிகளும் கட்சிகளுக்கு வாடகை  விடப்படும் பணிகளை இந்நிறுவனம் 40 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. பொதுவாக இசை நிகழ்ச்சிக்கு மட்டுமே SPEAKERகள் வாடகைக்கு விடும் இந்நிறுவனங்கள் தேர்தல் காலத்தில், அரசியல் கட்சிகளுக்கு வாடகைக்கு விட்டு பிசியாக இருப்பதாக கூறுகின்றனர். காலத்திற்கு ஏற்ப, SPEAKER களின் தோற்றமும், நவீன SPEAKER களும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர இரவு நேர பிரசாத்தின் போது லைட் வசதிகளையும் இந்த குழு பொருத்துகிறது. பிரசாரத்தின் போது சேதமடையும் பொருட்களுக்கு அரசியல் கட்சிகள் இழப்பீடு தருவார்களா என்ற கேட்டதற்கு, , 40 ஆண்டுகளில் பிரசாரத்திற்கு எடுத்து செல்லும் எந்த பொருட்களும் சேதமடைந்தது இல்லை என்று பெருமிதமாக கூறுகின்றனர். பிரசாரம் சூடு பிடிக்கும் போது, தங்களது தொழிலும் சூடு பிடிக்கும் என்று மகிழ்ச்சியாக பிரசார ஆயத்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5795 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4594 views

பிற செய்திகள்

"அரசுக்கு கவலையில்லை" - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு - அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம்

சென்னை உள்பட நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி பாதிக்கப்படுவார்கள் என நிதி ஆயோக் அமைப்புக்கு தெரிந்துள்ளது, மத்திய மற்றும் தமிழக அரசுக்கு தெரியாமல் உள்ளதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.

31 views

கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்

கேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

53 views

என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் தங்க தமிழ்செல்வன் - தினகரன்

முறையாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர் என தங்கத் தமிழ்செல்வனை எச்சரித்ததாக தினகரன் தெரிவித்துள்ளார்.

198 views

தினகரனை விட்டு விலகுகிறாரா தங்க தமிழ்செல்வன்?

பதவி, அதிகாரம் இல்லையென்றால் அரசியலில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியாது என்பதை தங்க தமிழ்செல்வனும் உணர்ந்து விட்டார் என்பதையே, அவரது நடவடிக்கை காட்டுவதாக அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அப்படி என்ன நடவடிக்கை தான் தங்கதமிழ் செல்வன் எடுத்தார்.

11 views

தினகரனுக்கு எதிரான தங்கதமிழ்செல்வன் பேச்சு அரசியல் நாகரீகம் அற்றது - கதிர்காமு, முன்னாள் எம்.எல்.ஏ.

தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசிய விவகாரம் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.

55 views

தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலக வேண்டும் - புகழேந்தி

தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலக வேண்டும் என அமமுக நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

182 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.