மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : 60 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது
பதிவு : மார்ச் 16, 2019, 08:23 PM
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கீழகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த சில நாட்களாக உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக, பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது சகோதரி உமா, சேத்தியாத்தோப்பு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் வழக் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே ஊரை சேர்ந்த, முதியவர் தாடி ராமலிங்கம், பாலு, விநாயகம், வேல்முருகன், வீராசாமி ஆகிய 5 பேர் சிறுமியை வெவ்வேறு காலக்கட்டங்களில் மாறி மாறி பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 5 பேரை கைது செய்த போலீசார், பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

924 views

பிற செய்திகள்

மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்

இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

24 views

"தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை" - பிரேமலதா

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

327 views

பேனரை கிழித்ததாக ஒரு பிரிவினர் புகார்...பொய்புகார் அளிப்பதாக மற்றொரு பிரிவினர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவினர் மறியல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

8 views

பிறந்து 15 நாட்களே ஆன இரு நாய்குட்டிகள் அடித்து கொலை : சப்தம் எழுப்பியதால் பேட்டரி கடை உரிமையாளர்கள் வெறிச்செயல்

கும்பகோணம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன இரண்டு நாய்குட்டிகள் அடித்து கொன்றதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

4 views

"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்" - நாகை எம்.பி. செல்வராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.

27 views

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை

திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.