மடப்புரத்தில் மக்கள் திடீர் சாலை மறியல் : சாராய வியாபாரியை கைது செய்ய கோரிக்கை
பதிவு : மார்ச் 16, 2019, 05:07 PM
சாராய பாக்கெட்டுகளை உடைத்து சாலையில் கொட்டியதால் பரபரப்பு
மயிலாடுதுறை மடப்புரத்தில், பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அவர்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அப்போது, மடப்புரத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் தூண்டி என்கிற பாலகிருஷ்ணன் மீது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய மக்கள், சாராய பாக்கெட்டுகளை உடைத்து சாலையில் கொட்ட முயற்சித்தனர். அதை போலிசார் தடுத்தும், மீறி சாராய பாக்கெட்டுகளை உடைத்து சாலையில் கொட்டி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இரதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் எச்சரித்தனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

924 views

பிற செய்திகள்

மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்

இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

19 views

"தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை" - பிரேமலதா

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

268 views

பேனரை கிழித்ததாக ஒரு பிரிவினர் புகார்...பொய்புகார் அளிப்பதாக மற்றொரு பிரிவினர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவினர் மறியல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

7 views

பிறந்து 15 நாட்களே ஆன இரு நாய்குட்டிகள் அடித்து கொலை : சப்தம் எழுப்பியதால் பேட்டரி கடை உரிமையாளர்கள் வெறிச்செயல்

கும்பகோணம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன இரண்டு நாய்குட்டிகள் அடித்து கொன்றதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

4 views

"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்" - நாகை எம்.பி. செல்வராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.

25 views

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை

திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.