பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : வேகமெடுக்கும் சிபிசிஐடி விசாரணை
பதிவு : மார்ச் 16, 2019, 03:26 PM
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான சிபிசிஐடி போலீசாரின் விசாரணை வேகமெடுத்துள்ளது.
பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து  விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவுக்கரசு இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை காட்டி, அவனை விசாரிக்கின்றனர்.  அடுத்ததாக, பொள்ளாச்சி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு திருநாவுக்கரசை அழைத்து சென்று விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை சிறையில் வைத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 

பிற செய்திகள்

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

42 views

அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு : மேடையிலிருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டதாக புகார்

ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டார்.

173 views

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

518 views

50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை

சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

45 views

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார். *

66 views

மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கணவர் மனு

மனைவி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, சாஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.

274 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.