பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்...
பதிவு : மார்ச் 15, 2019, 02:36 PM
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்கள் - போலீசார் தடுத்த‌தால் பரபரப்பு...

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், குற்றவாளிகள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாமல், உடனடியாக கடுமையான தண்டனை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். 

பொள்ளாச்சி விவகாரம் : அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வகுப்புக்கு திரும்புமாறு அறிவுறுத்திய பேராசிரியர்களுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : அரசாணையை எரித்து ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டதை கண்டித்து புதுச்சேரி திராவிட விடுதலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்த தமிழக அரசின் அரசாணையை தீயிட்டு எரித்து, முழக்கமிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டம் : மாணவிகள் - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

40 views

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - அரசு கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

90 views

கல்லூரி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - மாணவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகே கல்லூரி பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

179 views

பிற செய்திகள்

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

42 views

அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு : மேடையிலிருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டதாக புகார்

ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டார்.

173 views

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

520 views

50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை

சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

45 views

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார். *

66 views

மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கணவர் மனு

மனைவி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, சாஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.

275 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.