கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா இன்று தொடங்குகிறது
பதிவு : மார்ச் 15, 2019, 08:51 AM
கச்சத்தீவு அந்தோணியர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி 2 தினங்கள் நடைபெறுகிறது.
கச்சத்தீவு அந்தோணியர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி 2 தினங்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 2,450 பேர், 80 விசைப்படகுகள் மூலம் கச்சத்தீவு செல்கின்றனர். இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் இருந்து பலத்த சோதனை பிறகு உரிய உயிர் பாதுகாப்பு உபகரணங்களோடு ஒரு குழுவினர் புறப்பட்டனர். விழாவின் முதல்நாளான இன்று சிலுவைப்பாடு நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நாளை காலை திருவிழாவின் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 
யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகசம் தலைமையில் இருநாட்டு பங்குதந்தைகளும் இரு நாட்டு மக்களும் பங்கேற்கிறார்கள்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.