காதல் திருமணம் செய்த மகள், மருமகனை கடத்த முயற்சி
பதிவு : மார்ச் 15, 2019, 02:43 AM
பெண்ணின் தாய் உட்பட 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கரூர் மாவட்டம், பிச்சம்பட்டியை சேர்ந்த சேதுராமனுக்கும், நிலக்கோட்டை சேர்ந்த சிவரஞ்சனிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.  இருவரும் கடந்த கடந்தாண்டு அக்டோபர் 23ஆம் தேதி திண்டுக்கல்லில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தை தொடர்ந்து அவர்கள் நான்கு மாதங்களாக வெவ்வேறு ஊர்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில்  4 நாட்களுக்கு முன்பு பிச்சம்பட்டிக்கு இருவரும் வந்ததை அறிந்த, சிவரஞ்சனியின் தாயார் ஜோதிமணி அவரது தங்கை ஸ்ரீதேவி மற்றும் உறவினர்கள் என மொத்தம் 9 பேர் பிச்சம்பட்டி வந்துள்ளனர்.சிவரஞ்சனியை, ஜோதிமணி மற்றும் அவரது ஆட்கள் அடித்து இழுத்து காருக்குள் போட்டுக் கொண்டு நிலக்கோட்டை நோக்கி சென்றனர்.இந்த பரபரப்பில், ஸ்ரீதேவியை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். அங்கிருந்தவர்கள் ஸ்ரீதேவியை அடித்து உதைத்து மாயனூர் போலீசில் ஒப்படைத்தனர். சிவரஞ்சனியை கடத்திய வழக்கில், புகார் பதிவு செய்த போலீசார்,  சிவரஞ்சனியை மீட்டதுடன், ஜோதிமணி,ஸ்ரீதேவி, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.தலைமறைவாகி உள்ள பாண்டி மற்றும் சண்முகத்தை வலைவீசி தேடி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

924 views

பிற செய்திகள்

மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்

இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

26 views

"தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை" - பிரேமலதா

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

352 views

பேனரை கிழித்ததாக ஒரு பிரிவினர் புகார்...பொய்புகார் அளிப்பதாக மற்றொரு பிரிவினர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவினர் மறியல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

8 views

பிறந்து 15 நாட்களே ஆன இரு நாய்குட்டிகள் அடித்து கொலை : சப்தம் எழுப்பியதால் பேட்டரி கடை உரிமையாளர்கள் வெறிச்செயல்

கும்பகோணம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன இரண்டு நாய்குட்டிகள் அடித்து கொன்றதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

4 views

"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்" - நாகை எம்.பி. செல்வராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.

30 views

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை

திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.