எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி
பதிவு : மார்ச் 15, 2019, 02:16 AM
எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நிசார் அஹமது. இவர் 2013-ம் ஆண்டு  தனது மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதற்காக அப்போதைய போக்குவரத்து துறை துணை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மோகன்ராஜ் மற்றும் அவரது உதவியாளர் செல்வகுமாருக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தராததால், நிசார் அகமது பணத்தை திரும்ப கேட்டுள்ளார் . அப்போது அவர்கள் கொடுத்த 2 காசோலைகளும் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆனதை தொடர்ந்து நிசார் அகமது உயர்நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி 2015-ஆம் தேதி மோகன்ராஜ் மற்றும் செல்வகுமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, மோகன்ராஜை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாகவும் இவர் மீது மற்றொரு வழக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மலேசியாவிற்கு தப்பி சென்ற மோகன்ராஜின் உதவியாளர் செல்வகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்

பிற செய்திகள்

ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் : ரூ.12.20 லட்சம் நிவாரணம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

13 views

"துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்கிட வேண்டும்" - மனித உரிமை ஆணையத்தில் ஸ்ரீரெட்டி புகார்

தமக்கு துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்க கோரி, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மனு அளித்துள்ளார்.

25 views

பேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

60 views

நகராட்சி பணி ஆய்வாளரை செருப்பால் அடித்த ஒப்பந்தக்காரர் : நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தாம்பரத்தில் நகராட்சி பணி ஆய்வாளரை, ஒப்பந்தக்காரர் செருப்பால் அடித்துள்ள் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 views

"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

23 views

"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்

வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.