பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு
பதிவு : மார்ச் 14, 2019, 01:46 PM
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வீடியோவாக எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட 4 பேர் மீது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு செய்து உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பியிருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4775 views

பிற செய்திகள்

கோவை : பேருந்தில் 3 மூட்டை குட்கா பறிமுதல்

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

43 views

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

112 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

745 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

869 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

1270 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.