பொள்ளாச்சி பயங்கரம் - அதிர வைக்கும் தகவல்கள்
பதிவு : மார்ச் 14, 2019, 10:23 AM
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தோண்ட, தோண்ட அதிர வைக்கும் பல தகவல்கள் வெளியாகின்றன.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தோண்ட, தோண்ட அதிர வைக்கும் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 

2 படுக்கை  அறைகள் கொண்ட இந்த பண்ணை வீடு, பொள்ளாச்சியில் அருகே சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் உள்ளது. 

பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு சொந்தமானது, இந்த பண்ணை வீடு. ஒரு அடிதடி பிரச்சினை காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வீட்டை காலி செய்துவிட்டு பொள்ளாச்சி நகருக்கு குடியேறிவிட்டது, திருநாவுக்கரசு குடும்பம். அதுவே திருநாவுக்கரசுக்கு வசதியாக போய்விட்டதாக கூறப்படுகிறது. 

சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து, இளம்பெண்களை இங்கே வரவழைத்து கொடூர கும்பல் சீரழித்ததாக கூறப்படுகிறது. இங்கே வரும், இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்ய சுவற்றில் தனியாக துளையிடப்பட்டுள்ளது.

அந்த துளையின் மூலம் வீடியோ எடுத்து அதன் மூலம் இளம்பெண்களை மிரட்டியிருக்கிறார்கள். சமூக வலைதளம் மட்டுமின்றி, காதலியுடன் தனியாக இருக்க இடம் கேட்கும் நண்பர்களுக்கும், தன் வீட்டில்  யாரும் இருக்க மாட்டார்கள், அதை பயன்படுத்திக்கொள் என திருநாவுக்கரசு தாராள மனசு காட்டுவாராம்.அப்படி காதலியுடன் வரும் நண்பனின் அந்தரங்கத்தை வீடியோவாக எடுத்து, அவர்களை அடித்து உதைத்து தங்கள் வழிக்கு கொண்டு வரும் செயலிலும் திருநாவுக்கரசு கும்பல் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. 

இந்த வீடு மட்டுமில்லாமல், சொகுசு கார்களிலும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக இந்த கும்பல் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி எடுக்கப்படும் வீடியோக்களை வைத்து அந்த பெண்களை மிரட்டி, பணம் பறிப்பார்கள் என சொல்லப்படுகிறது.பணம் கொடுக்க முடியவில்லை என்றால் அவர்களை தங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டல் விடுப்பார்கள் என கூறப்படுகிறது. 

இப்படி பல இளம்பெண்கள் மட்டுமின்றி திருமணமான பெண்களையும் இந்த கும்பல் சீரழித்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன. 100வது சம்பவம், 200வது சம்பவம் என பாலியல் வன்முறையை இந்த கும்பல் கேக் வெட்டி கொண்டாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பலருக்கு விருந்தாக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருமுறை வந்தால், வீடியோ அழிக்கப்படும், நீ வராவிட்டால் உன் தோழியின் செல்போன் எண் கொடு, நகை கொடு, பணம் கொடு என பெண்களை மிரட்டி, மிரட்டி இவர்கள் பணிய வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய இவர்கள், அந்த வீடியோக்கள் மூலமே தற்போது சிக்கியிருக்கிறார்கள். 

பெண்களை சித்ரவதை செய்யும் வீடியோக்களில் 4 பேரும் இருப்பதே அவர்களுக்கு எதிரான ஆதாரமாக மாறியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

646 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5468 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6415 views

பிற செய்திகள்

மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்

இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

26 views

"தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை" - பிரேமலதா

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

355 views

பேனரை கிழித்ததாக ஒரு பிரிவினர் புகார்...பொய்புகார் அளிப்பதாக மற்றொரு பிரிவினர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவினர் மறியல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

8 views

பிறந்து 15 நாட்களே ஆன இரு நாய்குட்டிகள் அடித்து கொலை : சப்தம் எழுப்பியதால் பேட்டரி கடை உரிமையாளர்கள் வெறிச்செயல்

கும்பகோணம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன இரண்டு நாய்குட்டிகள் அடித்து கொன்றதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

4 views

"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்" - நாகை எம்.பி. செல்வராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.

30 views

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை

திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.