ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை : கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரசார கூட்டத்தில் பங்கேற்பு
பதிவு : மார்ச் 13, 2019, 08:33 AM
பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகிறார்.
நாகர்கோவிலில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி இன்று காலை சென்னை வருகிறார்.  ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று பேசும் அவர் பின்னர் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பிறகு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் செல்கிறார். தொடர்ந்து கட்சியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். நாகர்கோவிலில் ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டமே தமிழகத்தில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரசார கூட்டம்  என்பதால் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரசுடன் அணி சேர்ந்துள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4773 views

பிற செய்திகள்

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

88 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

581 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

719 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

1083 views

சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் வேட்பு மனு தாக்கல்

மங்களகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

62 views

"இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நாங்களே ஜெயிப்போம்" - தங்க தமிழ்ச்செல்வன்

இளைஞர்கள் தங்கள் பக்கம் இருப்பதால் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக மாபெரும் வெற்றிபெறும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

132 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.