மதுரையில் தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரிக்கை
பதிவு : மார்ச் 13, 2019, 01:56 AM
தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 18ம் தேதியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும் என கூறியிருந்தார்.  தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு,தேர்தலில் நூறு சதவீத வாக்காளர்கள் வாக்கு அளிக்குமாறு தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வரும் நிலையில்,லட்சக் கணக்கானோர் திருவிழா சென்றால் எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்பினர்.மேலும், மதுரையில் தேர்தல் தேதியை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் பதில் கேட்டு நாளை மறுநாள்  தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை  வியாழக் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக பிரணாப் அறிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்

31 views

பிற செய்திகள்

"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை

கன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

3 views

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2 views

சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு

கடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

4 views

சர்வர் கோளாறு - ரயில்வே தேர்வுக்கு அனுமதி மறுப்பு

சென்னை அருகே ஆவடியில் ரயில்வே பணிக்கான தேர்வு மையத்தில், சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

3 views

"இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை இல்லை" - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

3 views

பதநீர் இறக்கும் போது விபத்து : பனைமரத்தில் இருந்து விழுந்தவர் பலி

திருச்செந்தூர், குருநாதபுரத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவர் பனைமரம் ஏறி பதநீர் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.