தவறான சிசிச்சை என எப்படி கூறமுடியும், ஆணையம் அமைதி காத்தது ஏன்? - அப்பல்லோ கேள்வி
பதிவு : மார்ச் 12, 2019, 06:59 PM
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரிஅப்பலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
இந்த மனு  நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்த போது காரசார வாதம் நடைபெற்றது. அப்பலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ராமன், சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவருக்கு வழங்கிய சிகிச்சை போதுமானதா என விசாரிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றார்.

தவறான சிகிச்சை வழங்கியதாக ஆணைய வழக்கறிஞர் எப்படி கூற முடியும்?, இதற்கு ஆணையம் அமைதி காத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய ஆணையம் ரகசியமாக மருத்துவ குழுவை நியமித்ததாக வாதிட்டார்.

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் அது தொடர்பாக அரசுக்கு தகவல் அனுப்பாதது ஏன்? என அப்பலோ தரப்பு வழக்கறிஞர் வினவினார்.

இதனிடையே, ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரேஷ், ஆணையம் நியமித்த மருத்துவ குழு அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், விசாரணை 90 சதவீதம் முடிந்து விட்டதாகவும் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4725 views

பிற செய்திகள்

ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் பூப்பல்லக்கிலும், ஸ்ரீரங்க மன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

3 views

கை பம்பில் தண்ணீர் அடித்து குடிக்கும் மாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்

எருமை மாடு ஒன்று சாலையோரம் உள்ள கை பம்பில் தனது கொம்பை பயன்படுத்தி தண்ணீர் அடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

45 views

24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு

தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 views

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை - ரகசிய விசாரணை நடத்திய குழந்தைகள் நல வாரியம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

39 views

துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு - ஐஸ் ஹவுஸ் போலீசாரும் பங்கேற்பு

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சுமார் 91 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் ஐஸ் ஹவுஸ் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

9 views

பிரதமரை எதிர்த்து தமிழக விவசாயிகள் வேட்பு மனுத்தாக்கல்

பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாகண்ணு கூறியுள்ளார்.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.