நிர்மலாதேவி வழக்கு கடந்து வந்த பாதை....
பதிவு : மார்ச் 12, 2019, 04:39 PM
மாற்றம் : மார்ச் 12, 2019, 05:09 PM
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்துச்  சென்றதாக வெளியான ஆடியோ ஆதாரத்தின் பேரில் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முருகன், கருப்பசாமிக்கு பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த குழு கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தியது. இதற்கு முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஜாமின் கேட்டு விண்ணப்பித்த ஏராளமான மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில்  வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு, இதனிடையே நிர்மலாதேவிக்கு சிறையில் பல்வேறு கொடுமைகள் நடப்பதாகவும், போதுமான சட்ட உதவிகள் வழங்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது ஏராளமான குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்படும் போது நிர்மலாதேவிக்கு ஒரு வருடங்களாகியும் ஜாமீன் ஏன் வழங்கப்படவில்லை என நீதிபதி கேள்வி. நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு எந்த தடையும் இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல். இதனைத் தொடர்ந்து நிர்மலாதேவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானபோது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

929 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4336 views

பிற செய்திகள்

மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்

இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

24 views

"தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை" - பிரேமலதா

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

336 views

பேனரை கிழித்ததாக ஒரு பிரிவினர் புகார்...பொய்புகார் அளிப்பதாக மற்றொரு பிரிவினர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவினர் மறியல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

8 views

பிறந்து 15 நாட்களே ஆன இரு நாய்குட்டிகள் அடித்து கொலை : சப்தம் எழுப்பியதால் பேட்டரி கடை உரிமையாளர்கள் வெறிச்செயல்

கும்பகோணம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன இரண்டு நாய்குட்டிகள் அடித்து கொன்றதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

4 views

"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்" - நாகை எம்.பி. செல்வராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.

27 views

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை

திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.