"21 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்" - உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனு
பதிவு : மார்ச் 12, 2019, 03:37 PM
தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தின் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளை தவிர 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்தார். வழக்கு நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட 3 தொகுதிகளில் தேர்தல் நடத்த இயலாது எனவும் அவர் விளக்கம் அளித்தார். இதனிடையே, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 18 தொகுதிகளோடு திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரத்தில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையீடு செய்தார். இதைதொடர்ந்து, இந்த வழக்கை வரும் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.

3 தொகுதிகளின் இடைத் தேர்தலை நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. மனு அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வழக்கு நிலுவையை காரணம் காட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக எம்.பி.க்கள் சிவா, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு நேரில் வந்து மனு அளித்துள்ளனர். 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

40 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3767 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

119 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

30 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

10 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

11 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

318 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.