பொள்ளாச்சி விவகாரம் : முக்கிய குற்றவாளி யார்?
பதிவு : மார்ச் 12, 2019, 10:14 AM
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறியும் பேஸ்புக் மூலம் பழகிய பெண்களை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறியும் பேஸ்புக் மூலம் பழகிய பெண்களை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் 
செய்துள்ளது. 

அப்போது வீடியோ எடுத்து அப்பெண்களை மிரட்டி அந்த கும்பல் பணம் பறித்தும் வந்துள்ளது.  இதனால் பாதிக்கப்பட்ட 
ஒரு கல்லூரி மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான முக்கிய நபரான திருநாவுக்கரசையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட கும்பல்  பெண்களிடம் கொடூரமாக நடந்து கொள்ளும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக  அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு இல்லை என  கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்  எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்,

இதற்கிடையே  பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த  பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

இதனிடையே நாகராஜ் மீது அதிமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. கட்சி கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து திங்களன்று இரவு  டிஜிபி அலுவலகத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் மனு ஒன்றை அளித்தார். 

இந்த நிலையில் தன் தங்கைக்கு ஏற்பட்ட நிலைமை இனி யாருக்கும் நேரக்கூடாது என்பதற்காகதான் போலீசில் புகார் அளித்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. அப்போது மேலும் பல உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

788 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4841 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6146 views

பிற செய்திகள்

ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் : ரூ.12.20 லட்சம் நிவாரணம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

13 views

"துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்கிட வேண்டும்" - மனித உரிமை ஆணையத்தில் ஸ்ரீரெட்டி புகார்

தமக்கு துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்க கோரி, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மனு அளித்துள்ளார்.

25 views

பேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

60 views

நகராட்சி பணி ஆய்வாளரை செருப்பால் அடித்த ஒப்பந்தக்காரர் : நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தாம்பரத்தில் நகராட்சி பணி ஆய்வாளரை, ஒப்பந்தக்காரர் செருப்பால் அடித்துள்ள் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 views

"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

23 views

"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்

வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.