வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்
பதிவு : மார்ச் 12, 2019, 02:48 AM
மாற்றம் : மார்ச் 12, 2019, 05:10 AM
அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு வளாகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில்  4 வயது  சிறுவனின்  செயலால் அதிஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சுண்ணாம்புகுளத்தில் 3 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் 6 மணிக்கு விடப்பட்டது. இதனையடுத்து வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த வருண் என்ற வீட்டிற்கு சென்று தனது தாயாரை அழைத்துள்ளான். அப்போது பூட்டப்பட்ட கதவை திறந்து வெளியே வந்த மணிமேகலை, அருகே உள்ள ஜவகர் என்பவரின் வீட்டின் வாசலில் சமையல் கியாஸ் சிலிண்டர் தீ  பிடித்து எரிவதை கண்டு திடுக்கிட்டார். இதனையடுத்து  அந்த வளாகத்தில் இருந்த அனைவரையும் அவர் உஷார்படுத்தினார். பின்னர் அருகே உள்ள மற்றொரு குடியிருப்பு வளாகத்திற்கு மேல் மாடி வழியே அவர்கள் இடம் மாறி சென்றனர். பின்னர் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

780 views

பிற செய்திகள்

சிகிச்சை பெற வருபவர்களிடம் லஞ்சம் பெறும் செவிலியர்...

சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் செவிலியர் லஞ்சம் பெறும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

3 views

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் - கமலுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோட்சே குறித்து கருத்து வெளியிட்ட கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரியில் சுதேசி மில் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

27 views

புராதன தர்மராஜா கோயில் தீமிதித்திருவிழா - 20 ஆயிரம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

திருத்தணியில் புராதன தர்மராஜா கோயிலில் நடைபெற்ற தீமிதித்திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

24 views

சமயபுரத்தில் 14ஆம் நாள் பஞ்சபிரகார திருவிழா - வெள்ளி குதிரை வாகனத்தில்அம்மன் வீதி உலா

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில், பஞ்ச பிரகார விழா நடைபெற்றது.

9 views

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

76 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.