அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன?
பதிவு : மார்ச் 11, 2019, 12:05 AM
நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

* தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசுகள் புதிய நலத் திட்டங்களை அறிவிக்க கூடாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்களுக்கு தடையில்லை.

* அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது

* பதவி உயர்வு அளிக்கக் கூடாது என்பது விதி. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்

* அரசு விழாக்கள் நடத்த கூடாது. அமைச்சர்கள் என்ற முறையில் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.

* அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது

* பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்க கூடாது 

* வாக்குச் சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை

* வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்

* சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது

* கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது

* மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது

* மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது

* அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது

* தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாளுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்

* வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச் சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது


தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

732 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4775 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6121 views

பிற செய்திகள்

வேலூர் தொகுதி : நான் எம்.பி-யானால் - வேட்பாளர்களின் வாக்கு உறுதி

வேலூர் தொகுதி : நான் எம்.பி-யானால் - வேட்பாளர்களின் வாக்கு உறுதி

7 views

"அ.தி.மு.க.வுக்கு தினகரன் தேவையில்லை" - அமைச்சர் ஓ எஸ் மணியன்

"தேர்தல் முடிந்ததும் அ.ம.மு.க- வில் உள்ள அனைவரும் வந்து விடுவர்"

17 views

"விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் அனுமதிக்க மாட்டோம்" - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான எந்தத் திட்டமும் செயல்படுத்த விட மாட்டோம் என்று முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.