நாடாளுமன்ற தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு
பதிவு : மார்ச் 10, 2019, 11:57 AM
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1050 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன. அவர்களிடம் இன்று முதல் ​நேர்காணல் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலளத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், டிஆர் பாலு ஆகியோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். முதலாவதாக தூத்துக்குடி தொகுதிக்கு நேர்காணல் நடைபெற்றது. விருப்ப மனு அளித்த திமுக எம்.பி. கனிமொழியிடம் நேர்காணல் நடைபெற்றது. இதையடுத்து, தொடர்ந்து நடைபெறும் நேர்காணலில் கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே, 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய  நேற்று  நேர்காணல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் மூலமாக 3 கோடியே 35 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

929 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4336 views

பிற செய்திகள்

பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நினைவு தினம்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன் வசீகரக் குரலால் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்ட பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவு தினம்

6 views

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் - ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுடன் சந்திப்பு

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

31 views

சேலம் : செக்கானூர் கதவணை பராமரிப்பு பணி தொடக்கம்

சேலம் மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், மேட்டூர், செக்கானூர் கதவணை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

9 views

நெல்லை: என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

நெல்லை, பாளையங்கோட்டையில் என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது.

8 views

குன்னூர் : 61வது பழக் கண்காட்சி துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் நிலவுகிறது.

13 views

அரசு பள்ளிகளை பாதுகாக்க சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தாம்பரத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் தொடங்கியது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.