மோடி என்ற மக்கள் கோஷத்தால் பலரின் தூக்கம் கலைந்துள்ளது - பிரதமர் மோடி
பதிவு : மார்ச் 09, 2019, 04:54 PM
மாற்றம் : மார்ச் 09, 2019, 04:57 PM
மோடி மோடி என்று மக்கள் எழுப்பும் கோஷத்தால் பலர் தூக்கத்தை இழந்து தவிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.
உத்தரபிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, நொய்டாவில் பண்டிட் தீனதயாள் உபத்யாயா பெயரில் தொல்லியல் கல்லூரியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், உத்தர பிரதேசத்தின் முந்தைய அரசில் சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் பல வளர்ச்சி திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்படாமல் முடங்கியதாகவும், பாஜக அரசு அமைந்த பின்னர் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் 2014ஆம் ஆண்டு வரை நாட்டில் 2 செல்போன் தொழிற்சாலைகளே இருந்த நிலையில், தற்போது, 125 தொழிற்சாலைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். முன்பு பல்வேறு நில முறைகேடுக்கு பெயர் பெற்ற நொய்டா தற்போது வாய்ப்புகளுக்கான நிலமாக மாறி உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.முன்னதாக அந்த கல்வி வளாகத்தில் பண்டிட் தீனதயாள் உபத்யாயா சிலையை அவர் திறந்து வைத்தார்

தொடர்புடைய செய்திகள்

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு : குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

தண்டனையைஉறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

1986 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

360 views

பிற செய்திகள்

3 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு : வரும் 28ம் தேதி விசாரணை- உச்சநீதிமன்றம் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

18 views

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை

ஓசூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

48 views

இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

52 views

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

37 views

புதுச்சேரி, ஒசூர் , நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.