மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் : நீக்கப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க வந்ததால் பரபரப்பு
பதிவு : மார்ச் 09, 2019, 03:23 PM
நாடாளுமன்ற தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார்
நாடாளுமன்ற தேர்தலில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக இடம் ஒதுக்காத நிலையில்,தங்களது நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார்.அதன்படி விழுப்புரத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி பங்கேற்க வந்தார்.அப்போது அவருடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.இந்நிலையில் ஹைதர் அலி மட்டும், செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க, அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் அனுமதிக்கப்படவி​ல்லை.இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தங்களையும் செயற்குழு கூட்டத்தில் அனுமதிக்க வலியுறுத்தி, மண்டபத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

59 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

188 views

ஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

357 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

227 views

பிற செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.

50 views

100 % வாக்குப்பதிவு - VOTE ON APRIL 18 விழிப்புணர்வு பிரசாரம்

சேலத்தில் பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக VOTE ON APRIL 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

29 views

மேல்மருவத்தூரில் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் : அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு

திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்

99 views

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி

சிவகங்கை தவிர 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் காங்கிர​ஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

91 views

பழனி கோயிலுக்கு காணிக்கையாக தண்ணீர் லாரி : கோவையை சேர்ந்த பக்தர் வழங்கினார்

பழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார்.

146 views

மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்

தனியார் பள்ளி ஆசிரியை மீது, உதவி காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

133 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.