திருமணம் செய்து தர மறுத்ததால் பெண்ணின் தாய் கத்தியால் குத்தி கொலை
பதிவு : மார்ச் 02, 2019, 07:23 PM
நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால், பெண்ணின் தாயை, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள மசூதி காலனியை சேர்ந்த கார் ஓட்டுநர் வினோத். இவருக்கும் நரசிங்கபுரத்தை சேர்ந்த ரேவதி என்பவரின் மகளுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வினோத்தின் நடவடிக்கை சரியில்லை என கூறி 2 மாதங்களுக்கு முன் திருமணத்தை நிறுத்தியிருக்கிறார், ரேவதி. ஆனால், மகளை திருமணம் செய்து வைக்குமாறு அவரது தாய் ரேவதியிடம், வினோத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு ரேவதி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். 

இந்நிலையில் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய ரேவதியை, கிண்டி அருகே தனது நண்பருடன் வழிமறித்த விநோத் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போதும் பெண் கொடுக்க ரேவதி மறுத்திருக்கிறார். ஆத்திரமடைந்த வினோத், மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேவதியை சரமாரியாக வெட்டி விட்டு நண்பர்களுடன் தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரேவதி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய வினோத்தை கைது செய்த போலீசார், அவரது நண்பனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5711 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1384 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4589 views

பிற செய்திகள்

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

39 views

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

31 views

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

9 views

அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது

சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

82 views

தி.மு.க போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும், அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

68 views

குஷ்பு புகார் - வாகன எண் இன்றி 10 நாட்களாக நின்ற சரக்கு லாரி பறிமுதல்...

வாகன எண் இன்றி 10 நாட்களாக தம் வீடு அருகே நின்ற சரக்கு லாரி குறித்து நடிகை குஷ்பு அளித்த தகவலைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

4006 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.