சுங்கக் கட்டணம் செலுத்தாத அரசு பேருந்து சிறைபிடிப்பு
பதிவு : பிப்ரவரி 20, 2019, 07:19 PM
சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற அரசு பேருந்து, நாங்குநேரி சுங்கச் சாவடியை கடந்த போது, கட்டணம் செலுத்துவதற்காக பேருந்தில் இருந்த பார் குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற அரசு பேருந்து, நாங்குநேரி சுங்கச் சாவடியை கடந்த போது, கட்டணம் செலுத்துவதற்காக பேருந்தில் இருந்த பார் குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. ஸ்கேன் ஆகாத நிலையில், சுங்க கட்டணத்தை ரொக்கமாக செலுத்து  அரசு பேருந்து ஓட்டுனர்  மறுத்துள்ளார். இதனை அடுத்து, சுங்கச் சாவடி ஊழியர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்தனர்.  அந்த பேருந்தில் வந்த பயணிகள் வேறு ஒரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார், சுங்கச் சாவடி பணியாளர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து நான்கு மணி நேரத்துக்கு பின்பு பேருந்து விடுவிக்கப்பட்டது.  இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.