விளை நிலத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்க தளம் : மனமுடைந்து விவசாயி தற்கொலை
பதிவு : பிப்ரவரி 20, 2019, 06:19 PM
ஆந்திராவில் முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்க தனது விவசாய நிலத்தில் தளம் அமைக்கப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குண்டூரின் கொண்டவீடு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க முதல்வர் சந்திர பாபு நாயுடு சென்றார். இதற்காக அந்த கிராமத்தில் கோட்டேஸ்வர ராவ் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில், அவரது அனுமதி இன்றி, இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதிகாரிகள் இறங்குதளம் அமைத்ததால், அவர் பூச்சி மருந்து குடித்து, தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த சம்பவம், ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. விவசாயி தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

927 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4336 views

பிற செய்திகள்

இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

9 views

துவங்கியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் கூடியுள்ளது.

13 views

மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார் மோடி : மாலை 5 மணிக்கு பாஜக எம்.பிக்கள் கூட்டம்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் மாலையில் நடைபெறுகிறது.

11 views

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

134 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட , சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

196 views

கான்பூர் கிடங்கில் திடீர் தீ விபத்து - தீயில் சிக்கி பலர் தவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கோபத்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது

40 views

ஹோட்டலில் தீ விபத்து - உயிர் தப்பிய பொது மக்கள்

புதுச்சேரி தனியார் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.