ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் : தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை
பதிவு : பிப்ரவரி 20, 2019, 04:42 PM
ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு மற்றும் சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஐஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி கொடுத்த புகார் தொடர்பாக 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய விசாகா குழுவுக்கு உத்தரவிட்டார். அனைத்து அரசு அலுவலகங்களிலும் உயர் அதிகாரிகளின் அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும், சிபிடிஐடி விசாரணையை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி விசாரணை, ஒழுங்கு நடவடிக்கை, விசாகா குழு விசாரணையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சிபிசிஐடிக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டனர். 
______________________________

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

54 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3780 views

பிற செய்திகள்

இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

15 views

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

22 views

புதுச்சேரி, ஒசூர் , நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

30 views

ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு...

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

28 views

"ராதாரவி பேச்சு வருத்தம் அளிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகை குறித்த ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

44 views

"கடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன்?" - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி

தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன்? என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.