சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறித்த வழக்கு : தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
பதிவு : பிப்ரவரி 20, 2019, 02:49 PM
கல்வித்தகுதி, பணிநியமனம் குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு சட்டப்பல்கலைக் கழகத்தின் 32 பேராசிரியர்களுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழகத்தில் பதிவாளராக பணியாற்றிய சங்கர் தன்னை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றும் 32 பேராசிரியர்கள், தங்களின் கல்வித் தகுதி, நியமனம் குறித்த தகவல்களை பதில் மனுக்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழகம் மற்றும் துணைவேந்தர் டி.என்.சாஸ்திரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு,  தனிப்பட்ட ஒரு நபரின் பணி நீக்கம் தொடர்பான வழக்கில், 32 பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக பதிலளிக்க தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது செல்லாது எனவும், வழக்கின் வரம்பை விரிவுபடுத்த முடியாது எனவும் கூறி, தனி நீதிபதியின்  உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

412 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2197 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

547 views

பிற செய்திகள்

"வாக்கு எண்ணிக்கையின் போது கவனத்துடன் இருங்கள்" - முகவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

23 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக முகவர்கள் கவனத்துடன் பணியாற்றிட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

4 views

மாலை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் : காலை டெல்லி செல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணியே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை இரவு 7.30 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7 views

ஜூன் 23-ல் கணிப்பொறி ஆசிரியர் தேர்வு

முதுகலை ஆசிரியர் நிலையில், கணிப்பொறி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு, ஜூன் 23 ம் தேதி, நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

73 views

15 -ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் குறவன் கோட்டை என்ற பகுதியில் 15 ம் நூற்றாண்டுக்கு முந்தைய புலிகுத்தி வீரரின் நடுகல் மற்றும் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

43 views

ஹைட்ரோகார்பன் திட்டம் : விவசாயிகள் எதிர்ப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில், விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16 views

பழங்குடியினர் கருத்தரங்கு : ஆளுநர் பங்கேற்பு

ஊட்டியில் பழங்குடியினர் தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் புகைப்பட கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.