மாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு
பதிவு : பிப்ரவரி 20, 2019, 08:04 AM
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சாந்தநாத சுவாமி மற்றும் வேதநாயகி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுராந்தகம் :காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர் கோவில் மாசி மக தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.  கோவிலுக்கு எதிரே உள்ள குளத்தில் தெப்பத்தில் ஸ்ரீ கருணாகரப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தெப்பத்தில் வலம் வந்தனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டு தெப்பத்தில் உள்ள உள்ள கருணாகரன் பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர்.

சத்தியமங்கலம் :சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் கோயிலில் மாசிமகம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கோவிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் நூற்றுக்கணக்கான கிடாக்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். வழிபாடு நடத்த தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் முகாமிட்டு அங்கேயே சமைத்து உறவினர்களுக்கு விருந்திட்டு மகிழ்ந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மாசிமகம் திருவிழாவிற்கு மட்டுமே இக்கோயில் அமைந்துள்ள வனப்பகுதிக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி :திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாசிமாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஒவ்வொரு மாதம் பௌர்ணமி நாளன்று மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாடவீதிகளில் உலா வருவது வழக்கம். அதேபோல் இந்த மாசி மாதம்  பவுர்ணமியையொட்டி மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க தீபமேற்றி வழிபட்டனர். 

கடலூர் : 

கடலூர் துறைமுகம் பகுதியில் மாசிமகம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிராமத்து தெய்வங்கள் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இரவு முழுவதும் கடலில் கரையோரத்தில் உலா வந்த சுவாமிகளை ஆயிரக்கணக்கனோர் வந்து தரிசித்து சென்றனர்.

அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சி :மாசி மகத்தை முன்னிட்டு தனது தந்தையாக பாவித்த வல்லாள மகாராஜாவுக்கு கவுதம நதிக்கரையில் சுவாமி அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துரிஞ்சலாற்றில் வறட்சி நிலவுவதால், சிமெண்ட் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி சூலத்திற்கு அபிஷேகம் தீப ஆராதனை செய்யப்பட்டு தீர்த்தவரி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். 

திருவெறும்பூர் :திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நாகேஸ்வரி அம்மன் சங்கிலி கருப்பு சுவாமி கோவிலில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் ஏராளமானோர் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் அளித்தவரை கொலை செய்த 2 இளைஞர்கள்....

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உறவினர் பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை இரு இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

141 views

திருவண்ணாமலை : தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை

திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

31 views

யார் இந்த மைக் டைசன்...??

மைக் டைசன்.. குத்துச்சண்டை களத்தின் இரும்பு மனிதன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர்.. குத்துச்சண்டை விளையாட்டை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றவர்.

193 views

பிற செய்திகள்

உதவி காவல் ஆய்வாளராக இருந்தவர் தற்போது எம்.பி. - உயர் அதிகாரிக்கு சல்யூட் அடித்த எம்.பி

ஆந்திராவில் உதவி காவல் ஆய்வாளராக இருந்த ஓருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

5 views

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜினாமா - தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முடிவு

பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் 8 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

10 views

12 வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி..!

சென்னை கேளாம்பாக்கத்தில் 12 வது மாடியில் இருந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

64 views

காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் - வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அதிரடி

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

10 views

கமுதி அருகே மீன்களை போட்டி போட்டு பிடித்த மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது

12 views

72 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மின்சார வசதி பெற்ற பழங்குடியினர் கிராமம்

சுதந்திர இந்தியாவில் கடந்த 72 ஆண்டுகளாக மின் வசதியின்றி தவித்து வந்த நெல்லை பழங்குடியினர் கிராமம் முதல் முறையாக மின்சார வசதி பெற்றுள்ளது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.