"உங்களை போலவே என் நெஞ்சத்திலும் ஆத்திர நெருப்பு" - மோடி ஆவேச பேச்சு
பதிவு : பிப்ரவரி 17, 2019, 06:37 PM
நாட்டுமக்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான் தன்னுடைய நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான  நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பீகார் சென்ற பிரதமர் மோடி, பாட்னா மெட்ரோ ரயில் திட்டத்துக்கு  அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த அம்மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்தன் குமார் தாகூர் ஆகிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொள்வதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.