இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம கும்பல் : ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் விரட்டி பிடித்த போலீசார்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 06:28 PM
சென்னையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்களை ஜிபிஎஸ் கருவி உதவியுடன் ஆட்டோவில் பின்​தொடர்ந்து சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் நள்ளிரவில் திருடுப்பட்டது. இது தொடர்பாக அவர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் பைக் எங்கே செல்கிறது என்ற விவரத்தையும் செல்போனில் அவர் காட்டியுள்ளார். இதனையடுத்து ஆட்டோவில் பின்தொடர்ந்த போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக திரு.வி.க. நகர் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.