முதல்வருடன் "தினத்தந்தி " நிர்வாக இயக்குனர் சந்திப்பு
பதிவு : பிப்ரவரி 16, 2019, 11:43 PM
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை "தினத்தந்தி" குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சென்னையில் சந்தித்தார்.
சென்னை கிரீன்வேஸ்சாலை உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, "தினத்தந்தி"  குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பூங்கொத்து கொடுத்தார். "தமிழர் தந்தை" மறைந்த சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என  அண்மையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் நன்றி தெரிவித்து கொண்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.